Breaking News

மனைவியின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 2-வது கணவர்..

 


வில்லியனுார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மூன்று நாட்களுக்கு முன் தனது அந்தரங்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மூலம் தனது உறவினர்களுக்கும், தமக்கு அனுப்பி நான் சொல்லும் இடத்திற்கு தனிமையில் வர வேண்டும் என மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.


ஆபாச வீடியோக்களை வெளியிட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த பாண்டியன்(30) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.தொடர் விசாரணையில், பாண்டியன், அந்த பெண்ணின் 2வது கணவர். அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் அவர் பிரிந்தார். தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லாவிட்டால் அசிங்கப்படுத்துவேன் என ஆபாச வீடியோக்களை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது.


இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான போலீசார் பாண்டியனை கைது செய்து, ஆபாச படங்கள் அனுப்ப பயன்படுத்திய மொபைல்போனை பறிமுதல் செய்து, பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments

Copying is disabled on this page!