Breaking News

லோன்லி பிளானட்டின் பயண வழிகாட்டியில் சுற்றுலா பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் உலக அளவில் புதுச்சேரி கடற்கரை 2-ஆம் இடம் பிடித்துள்ளது...!!

 

புதுச்சேரி சுற்றுலா தலங்கள் 


புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலத்தில் சிறந்து விளங்குவதால் தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புதுவை சுற்றுலா தலத்தில் ராக் கடற்கரை முதலிடத்தில் உள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாடத்தில் சுற்றுலா பயணிகள் தேடும் முதல் மாநிலமாக புதுவை உள்ளது. 

இந்நிலையில் லோன்லி பிளானட், 2025ம் ஆண்டிற்கான சிறந்த பயண இடங்களை வெளியிட்டுள்ளது.லோன்லி பிளானட்டின் பயண வழிகாட்டியில் 30 பிரபலமான இடங்கள், நகரங்கள், நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சுற்றுலா பயணிகள் புத்தாண்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களை குறிப்பிட்டுள்ளது. அதன்படி சிறந்த நகரங்கள் பட்டியலில், பிரான்ஸ் நாட்டின் துலூஸின் கால்வாய் கரைகள் முதல் இடத்தை பிடித்துள்ளது. அடுத்தபடியாக இந்தியாவில் புதுச்சேரி கடற்கரை 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. பல்கேரியாவின் பான்ஸ்கோ 3ம் இடம் பிடித்துள்ளது.

No comments

Copying is disabled on this page!