கிணற்றை காணவில்லை என்ற வடிவேலு பாணியில் மயிலாடுதுறை அருகே அரசுக்கு சொந்தமான குளத்தை காணவில்லை என்று உளுத்துக்குப்பை ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் வருவாய்துறையினர் விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட உளுத்து குப்பை ஊராட்சியில் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் நீர் வழித்தடங்களை சுத்தம் செய்து சரிசெய்யும் முயற்சியை உளுத்துக்குப்பை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் மேற்கொண்டார். அப்போது உளுத்துக்குப்பை கிராமம் எல்லையில் வருவாய்துறை ஆவண புல எண் 306-ல் அரசு புறம்போக்கு வகைபாடுடைய குறிச்சி குளம் தற்போது இருந்த சுவடே தெரியாமல் தனி நபர்களால் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டிருந்தது கண்டு கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பா சாகுபடி செய்வதற்கான பணிகள் செய்யப்பட்டிருந்தது. ஆக்ரமிப்பு செய்யப்பட்டு காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து மீட்டுதரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையில் கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் புகார் மனு அளித்திருந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து குளத்தை மீட்டெடுக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட இடத்தில் மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments