நவராத்திரி விழாவையொட்டி தருமபுரம் ஆதீனத்தில் கொலு திருவிழா; ஆதீனக் கல்வி நிறுவனங்களின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கொலு கண்காட்சியை தருமபுரம் ஆதீனகர்த்தர் பார்வையிட்டார்
மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இன்று நவராத்திரி விழா தொடங்குவதை முன்னிட்டு தருமபுரம் ஆதீன திருமடத்தில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரங்களில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் சார்பில் கொலு கண்காட்சி நடைபெற்றது. இதில் தருமபுரம் குருஞானசம்பந்தர் தொடக்கப்பள்ளி, தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி, கன்னியாநத்தம் குருஞானசம்பந்தர் காமாட்சி நடுநிலைப்பள்ளி, சித்தர்காடு குருஞானசம்பந்தர் சிற்றம்பல நாடிகள் நடுநிலைப்பள்ளி மற்றும் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களின் சார்பில் ஏராளமான கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பார்வையிட்டார். முன்னதாக அவர் ஆதீன குருமுதல்வர் திரு உருவப்படத்துக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினார். இதில், ஆதீன கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
No comments