Breaking News

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதியில் புவி காப்பு அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

 



மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார் கோவில் ஒன்றியம் செம்பனார் கோவில் ஆறுபாதி பகுதியில் புவி காப்பு அறக்கட்டளை சார்பில் பூவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு புவி காப்பு அறக்கட்டளையில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பூவிகாப்பு அறக்கட்டளை நிறுவனர் இரணியன் தலைமையில் நடைபெற்றது இதில் ஆலோசகர் ராஜராஜன் மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் சந்தனம் செம்மரம் மகாகனி பலா நெல்லி உள்ளிட்ட பல்வேறு வகைகளான மரக்கன்றுகள் ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் அதன் வளர்ச்சிக்கு தேவையான இயற்கை உரங்கள் வைத்து மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மேலும் புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மரக்கன்றுகளின் அவசியம் குறித்து பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!