அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி ஆதித்தமிழர் பேரவையினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்!
தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியின மக்களுக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் அருந்ததியருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு குறித்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த தீர்ப்பினை எதிர்த்து திருமாவளவன் உள்பட 10 பேர் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் திருமாவளன் தாக்கல் செய்த மனு உள்பட 10 மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை, தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் மாவட்ட செயலாளர் காயல் முருகேசன் தலைமையில் பேரவை நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நிகழ்வின்போது, மாவட்ட தலைவர் சந்தனம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆதி தனலெட்சுமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருந்ததி முத்து, மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
No comments