காலாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள்.
கடந்த வாரம் முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த காலாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் திருச்செந்தூருக்கு சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் அதிகாலை முதலே கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட வரிசையில் நின்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் இலவச தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முதியோர்கள் செல்லும் தனி வழியிலும் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் கோவிலில் தரிசனம் முடித்த பக்தர்கள் கடற்கரை பகுதியில் குளித்து விட்டு பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் திருச்செந்தூர் கோவில் வளாகப்பகுதி, வள்ளிகுகை பகுதி, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001
No comments