கோவாவில் இருந்து பிஸ்கட் அட்டைப்பெட்டி ஏற்றி வந்த லாரியில் மது பாட்டில் கடத்தி வந்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவாவில் இருந்து வந்த லாரி ஒன்றை சோதனை செய்த போது, லாரியும் பின் பகுதியில் பிஸ்கட் மற்றும் ஓட்ஸ் அட்டைப்பெட்டிகளுக்கு இடையே 24 பெட்டிகளில் 1896 மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரும் அதன் உரிமையாளருமான ராஜா புது குடியைச் சேர்ந்த முனியசாமி என்பவரை கைது செய்தனர். மது பாட்டில் கடத்தி வந்த லாரியையும் போலீசார் செய்துள்ளனர். விசாரணையில் கோவாவில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்து, விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.
No comments