கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் நவராத்திரி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி. ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் புரட்டாசி மாத நவராத்திரி விழாவினை முன்னிட்டு ஸ்ரீ செண்பகவல்லி அம்மனுக்கு நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் உதிரி பூக்களினால் அர்ச்சனை செய்து, அடுக்கு ஆரத்தி, நட்சத்தி ஆரத்தி, நாக ஆரத்தி, பஞ்சாரத்தி காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடை, சாமரம், விசிறி, கண்ணாடி ஆகிய சோடஷ உபச்சாரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
No comments