திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்பு.
வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் 19 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த பட்டமளிப்பு விழாவில் 37 ஆயிரத்து 886 இளங்கலை மாணவர்களும் 5 ஆயிரத்து 268 முதுகலை மாணவர்களும் 111 எம் பில் மாணவர்களும் என மொத்தம் 43 ஆயிரத்து 735 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர் மேலும் இதில் 249 பேர் முனைவர் பட்டமும் 42 இளங்கலைப் பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண்ணும் 34 பேர் முதுகலை பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண்ணும் இதுவரை பெற்றுள்ளனர் எனவும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் தெரிவித்தார்
இந்தப் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என். ரவி பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஜி. ராமதாஸ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.
பின்னர் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஜி. ஏ. ராமதாஸ் மேடையில் பேசுகையில் புகழ்பெற்ற புலவர் திருவள்ளுவர் பெயரில் இந்தப் பல்கலைக்கழகம் ஏங்கி வருவது மிகவும் சிறப்புக்குரியது மனித இனத்துக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் திருவள்ளூர் கூறியுள்ளார் எனவும், நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய Tusar Kanti Behera நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படுகின்றன ஐஐடிகள் பல வெளிநாடுகளில் உலக அளவில் ஆராய்ச்சிகளின் மையமாக இந்தியா மாறி வருகிறது.
பட்ஜெட்டில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிகப்படியான நிதியை வழங்கி வருகிறது இதனால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு முன்னுரிமைகள் பல வழங்கப்படுகிறது இதில் திருவள்ளூர் பல்கலைக்கழக ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுவதில் ஆராய்ச்சிக்கான நிதி உதவியை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது, மேலும் மாணவர்களின் வெற்றிக்கு பின்னால் அவர்களது பெற்றோர்கள் ஆசிரியர்களின் தியாகங்கள் இருப்பதை மாணவர்கள் மறந்து விடக்கூடாது இந்நாடு மாணவர்கள் ஆகிய உங்களிடமிருந்து நிறைய சாதனைகளை எதிர்பார்க்கிறது என தெரிவித்தார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் வேல் முருகன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம், வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி மற்றும் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments