Breaking News

திருத்தணியில் விவசாயியிடம் 7000 லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.


திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீ விலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய ரமேஷ் தனது விவசாய நிலத்திற்கு வண்டல் மண் ஏரியிலிருந்து எடுப்பதற்கு வட்டாட்சியரிடம் அனுமதி பெற்ற பிறகு திருத்தணியில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷிடம் ஏரியில் மண் எடுக்கும் அளவுகள் எடுக்கும் பகுதி போன்றவை அனுமதிக்கு அனுப்பிய போது 7000 லஞ்சம் கேட்டுள்ளார். 

இதனையேடுத்த விவசாயி ரமேஷ் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய 7 ஆயிரம் பணத்தை விவசாயி ரமேஷிடம் வழங்கினர். அதனை  திருத்தணியில் உள்ள உதவி செயற்பொறியாளர் ரமேஷ் அலுவலகத்தில் விவசாயி ரமேஷ் வழங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான போலீசார் அதிரடியாக உதவி செயற்பொறியாளர் ரமேஷை கைது செய்தனர். 

அவரிடம் விசாரணை செய்து திருவள்ளூர் நீதிபதி வீட்டில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் புழல் சிறையில் அடைத்தனர். 

No comments

Copying is disabled on this page!