தமிழக அரசு ஒரு மிகப்பெரிய மோசடியை செய்துள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமத்திற்கான உச்சவரம்பை ஐந்து சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இதனால் தமிழக அரசு ஒரு மோசடி செய்துள்ளதாக நெல்லையில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் இன்று தெரிவித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தின் செயற்குழு கூட்டம் நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருவாய் துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர், இந்த கூட்டத்தில் கருணை அடிப்படையில் பணி நியமத்திற்கான உற்சவரம்பை ஐந்து சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டது ரத்து செய்ய வேண்டும் மக்களுடன் முதல்வர் முதல்வரின் முகவரி மற்றும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ள சிறப்பு திட்டங்கள் அமல்படுத்துவதில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஏற்பாடுகள் வரும் பணி நெருக்கடிகள் வழங்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது இளநிலை உதவியாளர் தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்திய உரிய அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டித்து மூன்று கட்ட போராட்டங்களை நடத்தினோம் ஆனால் இதுவரை தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை வருகின்ற 25ஆம் தேதி தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம் இதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற 29ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம் அதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் மேலும் அந்தந்த அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தையும் ஈடுபடுவோம்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் தலைமை நிலைய செயலாளர் வருவாய் துறை செயலாளர் ஆகியோரிடம் பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை தொடர்ந்து இதே நிலைமை நீடித்தால் அடுத்த கட்டமாக இந்த போராட்டம் என்பது மிகத் தீவிரபடுத்தப்படும்.
தமிழகத்தில் கருணை அடிப்படை பணிகளை நியமனம் செய்வதற்கு உச்சவரம்பாக ஐந்து சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இது ஒரு மோசடியான வேலை தமிழக அரசு இந்த வேளையில் இறங்கி உள்ளது நாங்கள் கருணை அடிப்படை பணி நியமனத்தை உச்சவரம்பை 5% நிர்ணயம் செய்யப்படுவதே ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம் தேர்தல் நேரத்தில் திமுக தனது வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் இப்போது வரை அந்த திட்டம் என்பது கொண்டுவரப்படவில்லை 100 நாட்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்துவிட்டு தற்போது வரை அது தொடர்பாக எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் இந்த போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ சார்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் மேலும் இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்து போராட்டத்தை நடத்துவார்கள் என அவர் தெரிவித்தார்.
No comments