Breaking News

வில்லியனூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்

 


வில்லியனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் எஸ்பி வம்சித ரெட்டி உத்தரவின் பேரில், ஆரியபாளையம் மங்களபுரி நகர் அருகே வில்லியனூர் போலீசார் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தனர்.


 அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த மூன்று வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது சாரம் பகுதி சேர்ந்த சூர்யா, ஆரியபாளையத்தை சேர்ந்த ரோகித், பிச்சன்வீரன்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்களது இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. 


அதனைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கைதானவர்கள் மீது கொலை முயற்சி வழிப்பறி ஆகிய வழக்குகள் நிலுவையல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!