Breaking News

மாற்றுத்திறனாளி வீராங்கணைகளுக்கு ரூ.3.20 லட்சத்தை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

 



புதுச்சேரியில் இருந்து மத்திய பிரதேசத்தில் நடைபெறும் கூடைப் பந்து போட்டிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி வீராங்கணைகளுக்கு ரூ.3.20 லட்சத்தை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.

இந்திய சக்கர நாற்காலி கூடைப் பந்து கூட்டமைப்பு சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 8-ஆவது தேசிய கூடைப் பந்துப் போட்டிகள் மத்திய பிரதேசத்தின் குவாலியா் நகரில் வரும் அக்.5 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இப்போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்பதற்கு, புதுச்சேரியிலிருந்து 10 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் தோ்வாகியுள்ளனா். அவா்கள் புதுச்சேரி சக்கர நாற்காலி கூடைப் பந்து சங்கத்தின் பொதுச் செயலா் சிவகுமாா் தலைமையில் குவாலியா் செல்லவுள்ளனா்.இந்த நிலையில், மத்திய பிரதேசம் செல்லவுள்ள வீராங்கனைகள் உள்ளிட்டோருக்கான பயணச் செலவை புதுவை முதல்வா் ரங்கசாமி முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தருவதாக தெரிவித்தாா்.அதன்படி, சட்டம் பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ரூ.3.20 லட்சத்துக்கான காசோலையை கூடைப் பந்து சங்கச்செயலா் உள்ளிட்டோரிடம் முதல்வா் வழங்கினாா்.

No comments

Copying is disabled on this page!