வடிகால் வாய்க்காலில் மேற்குபுறம் தடுப்பு சுவர் அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் கிராமம் திருக்கனூர் சாலை பாலம் முதல் மதினா நகர் பாலம் வரை உள்ள வடிகால் வாய்க்காலில் மேற்குபுறம் தடுப்பு சுவர் அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் , திருபுவனை தொகுதி கலிதீர்த்தாள்குப்பம் கிராமம் திருக்கனூர் சாலை பாலம் முதல் மதினா நகர் பாலம் வரை உள்ள வடிகால் வாய்க்காலில் மேற்குபுறம் தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கு ரூபாய் 41,60,000/- ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை பொதுப்பணித்துறை சார்பில் இன்று நடைபெற்றது. இதில் திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் செல்வராசு, இளநிலைப் பொறியாளர் முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments