மாநில அளவில் நடைபெற்ற ஜூனியர் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்திய கைப்பந்து கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட புதுச்சேரி கைப்பந்து சங்கம், ஒதியம்பட்டு காந்தி விளையாட்டு மன்றத்துடன் இணைந்து மாநில அளவிலான ஜூனியர் கைப்பந்து போட்டியை நடத்தியது.
உதயம் பட்டு காந்தி கைப்பந்து விளையாட்டு திடலில் நடைபெற்ற போட்டியில், ஆண்கள் பிரிவில் 30 அணிகளும் பெண்கள் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்று விளையாடின. இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி கைப்பந்து சங்கத்தின் நிர்வாகிகள், ஒதியம்பட்டு காந்தி விளையாட்டு மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments