முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு குப்பைகளை காவிரி கரையில் அப்படியே விட்டு சென்ற மக்கள் பாஜகவினர் தூய்மை செய்தனர்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மஹாலய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு குப்பைகளை காவிரி கரையில் போட்ட நிலையில் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பாஜகவினர் காவிரி ஆற்றில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
இந்தியாவில் தூய்மை பாரதம் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோடி.கண்ணன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். இன்று மஹாலயா அமாவாசை தினம் என்பதால் மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி அளித்து விட்டு சென்ற பின்னர் அங்கு குவிந்து கிடந்த வாழை இலை மற்றும் குப்பைகளை பாஜகவினர் கூட்டிப் பெருக்கி தன்னார்வத்துடன் அகற்றியது அனைவரின் பாராட்டை பெற்றது.
No comments