ஜோலார்பேட்டையில் தமிழக வெற்றிக் கழக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை 5 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிக் கொள்கை திருவிழா ஜோலார்பேட்டை நகர செயலாளர் ஜீவா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் முனுசாமி கலந்துகொண்டு தளபதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாவட்டத்தின் சார்பாக தொண்டர்களும் சிறப்பாக வழி நடத்தி கொண்டு போவது எப்படி என்ற ஆலோசனைக் கூட்டத்தில் கழக தொண்டர்களுக்கு சிறப்பாக ஆலோசனை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் வினோத் கண்ணா, மாவட்ட இணை செயலாளர் வினோத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி தலைவர் ராகுல், மாவட்ட துணைச் செயலாளர் பிரதாப், மாவட்ட இணைச் செயலாளர் அபிஷேக் மாவட்ட தகவல்தொழில் நுடப பிரிவு அமைப்பாளர் சந்தோஷ்.
மற்றும் அனைத்து நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments