கேத்தாண்டபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா எம்எல்ஏ பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் நாட்றம்பள்ளி தாலுக்கா கேத்தாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் இன்று காலை 10 மணியளவில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கு விழா பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் கலந்து கொண்டு 96 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம் மாவட்ட குழு உறுப்பினர் சிந்துஜா ஜெகன் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஒன்றிய குல உறுப்பினர் எழிலரசி குமார் அவைத்தலைவர் கோபிநாதன் கேத்தாண்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி கூத்தாண்ட குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சுரேஷ் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் பள்ளி மேலாண்மை குழு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவி தலைமை ஆசிரியர் பார்த்திபன் மற்றும் பலர் உள்ளனர்.
No comments