Breaking News

கரூர் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு சமூக விழிப்புணர்வு கூட்டங்கள்.


தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டதன் பேரில், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் முதல் கட்டமாக கரூர் மாவட்ட ஈஸ்.பி. .பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில் கரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை பேணும் வகையில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களில் அந்தந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு குற்ற தடுப்பு நடவடிக்கைகள், CCTV Camera கள் பொருத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், மதுபானம் மற்றும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் தொடர்பான குற்றங்களும் அதிலிருந்து இளைஞர்கள் தற்காத்து கொள்வது பற்றியும், சாலை பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அக்குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாப்பது குறித்தும், சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பொருளாதார குற்றங்கள் குறித்தான விழிப்புணர்வு சம்பந்தமாக காவல்துறையினர் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக வெங்கமேடு, செங்குந்தர் மஹாலில் நடைபெற்ற சமூக விழிப்பணர்வு கூட்டத்தில் கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அறிவுரைகளை வழங்கினார். 

No comments

Copying is disabled on this page!