போடிநாயக்கனூர் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நடத்தும் பதசஞ்சலன் மற்றும் பொதுக்கூட்டடம்.
கூட்டத்தினை தலைமை போடிநாயக்கனூர் ஜமீன்தார் T.B.S.S.C.S வடமலைராஜையா பாண்டியன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்புரை P. வெங்கட்ராமன் அவர்கள் ஆர் எஸ் எஸ் ப்ராந்த கார்யகாரணி சதஸ்ய தக்ஷிண் தமிழ்நாடு, T.K.S.M. உதயகுமார் ஜில்லா சங்கசாலக், M. முத்துராஜ் ஜில்லா கார்யவாஹ் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் R. வாசகர், A.M. ராஜேந்திரன், K.S. கணேசன் P.N.S. கோபிநாத், S. சண்முகநாதன் மற்றும் இந்து முன்னணியினர், பாஜகவினர் ஆர்.எஸ்.எஸ். என 300க்கும் மேற்பட்டவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆரம்பித்து தேவர் சிலை வழியாக குண்டால் ஈஸ்வரி கோவில் நகைக்கடை பஜார் வழியாக மீண்டும் திருவள்ளுவர் சிலை அருகில் வந்தடைந்தது. இவர்களது தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் திரலாக கலந்துகொண்டனர். மேலும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் சிறப்புரை வழங்கிய திரு வெங்கட்டராமன் அவர்களது உரையை மற்றவர்கள் தரையில் அமர்தபடியும் அணிவகுப்புகள் நடத்தப்பட்டு புல்லங்குழல் இசையுடன் கட்டுபாடுடன் அவர்களது கொடியேற்றம் நடத்தி கூட்டமானது துவக்கி வைக்கப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள வரை தங்களது ஆர்.எஸ் .எஸ். படையினர் சீரூடையை அணிந்து பெறுமையுடன் கலந்துகொண்டனர்.
No comments