புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகம் எதிரே நடத்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழரசி தலைமை தாங்கினார் இதில், சங்க நிர்வாகிகள் ராஜலட்சுமி, செல்வராணி, சத்யா, லலிதா, அரசு சம்மேளன நிர்வாகிகள் பிரேமதாசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் கலைமாமணி டாக்டர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேணடும். நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் பஞ்சப்படியை காலத்தோடு வழங்கிட வேண்டும்.
மூன்றாண்டுகள் பணி முடித்த ஒப்பந்த அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்
No comments