Breaking News

அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் சுகாதாரமற்ற குடிநீர் பாட்டிலுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு.

 


புதுச்சேரியில் சுகாதாரமற்ற குடி தண்ணீரை விநியோகிக்கும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்தும், பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீரை விநியோகம் செய்ய வலியுறுத்தியும் அதிமுக சார்பில் உப்பளம் சுப்பையா சாலை வாட்டர் டேங்க் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

  கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில், புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் 500கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுகாதாரமற்ற குடிநீர் பாட்டிலை காட்டி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து ஆர்பாட்டத்தில் பேசிய சொரத்தூர் ராஜேந்திரன்,மக்களுக்கு அத்தியாவசிய தேவையான தரமான குடிநீர் வழங்க வேண்டிய அரசு,தெருக்கு தெரு மதுபான கடைகளை திறந்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் மக்களை பற்றி கவலைப்படாத அரசு நடைபெற்று வருகிறது செந்தில் பாலாஜியை ஊழல் வாதி என்று சொன்ன திமுகவினர் தற்போது டெல்லி வரை சென்று அவருக்கு ஜாமீன் பெற்று வருவதாக குற்றம் சாட்டினார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், புதுச்சேரி மாநிலம் சுற்றுலா மாநிலம் என்றும் அடிப்படை வசதிகள் நிறைந்த சுகாதாரமான மாநிலம் என முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கடி கூறி வருகிறார் என்றும், மக்களுக்கு சுகாதாரமான பொடி தண்ணீர் வழங்க முடியாத மாநிலம் ஒரு சுகாதாரமான மாநிலமா? என கேள்வி எழுப்பினார். மேலும் போர்க்கால அடிப்படையில் சுகாதாரமான குடிநீர் வழங்கவில்லை என்றால் மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் அதிமுக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

No comments

Copying is disabled on this page!