Breaking News

பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

 


பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பாக இன்று அனுசரிக்கப்பட்டது.


இதனையொட்டி புதுச்சேரி, காமராஜ் சாலை - அண்ணா சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,முதலமைச்சர் ரங்கசாமி,சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன்,ஜெயக்குமார்,சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேஎஸ்பி ரமேஷ்,நேரு,பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன்,பிரகாஷ் குமார் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.இ சேகர் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதே போல பல்வேறு அரசியல் மற்றும் பொதுநல அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments

Copying is disabled on this page!