Breaking News

உளுந்தூர்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளையை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் தொடர்ந்து பசுமை காய்கறி அங்காடி விற்பனை நிலையம் மற்றும் கல்வராயன் மலையின் மலையாக சிறுதானிய பொருட்களின் விற்பனையகம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு 29 லட்சத்து 88 ஆயிறத்திர்க்கான காசோலை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இஆப, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் கே.திருநாவுக்கரசு, நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இளங்கோவன், உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல் ,திருநாவலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்,  வசந்தவேல், திருநாவலூர் முன்னால் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பத்மநாபன், நகர் ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி மணிக்கண்ணன்,திருநாவலூர் ஒன்றியக்குழு உறுப்பினர் மாயாவதி தவபாலன், நகர மன்ற உறுப்பினர்கள், செல்வகுமாரி ரமேஷ் பாபு, ஜெயசங்கர், மனோபாலன், முருகவேல் மற்றும் நன்றியுரை கள்ளக்குறிச்சி துணைப்பதிவாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!