Breaking News

நவராத்திரியை முன்னிட்டு கருவாழக்கரையில் நடைபெற்ற சத சண்டி மகாயாகத்தில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்பு :-

 


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அடுத்த கருவாழக்கரையில் சிவபுரம் வேத பாடசாலை அறக்கட்டளைக்கு சொந்தமான சதாசிவ பீடம் அமைந்துள்ளது. இங்கே அஷ்ட தசாபுஜ மகாலட்சுமி துர்கா தேவி சன்னதியில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்கள் நடைபெறும் சத சண்டி மகாயாகம் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது இரண்டாவது நாளான இன்று தேவி மகாத்மியத்தில் குறிப்பிட்டுள்ளபடி 13 அத்தியாயங்கள் பாராயணம் செய்யப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாகுதி செய்யப்பட்டது. பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற சத சண்டி ஹோமத்தில் திருவாவடுதுறை ஆதினம் 24 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

அம்மனுக்கு சிறப்பு அபிசேகங்கள் நடைபெறும் காட்சி


நேற்று தொடங்கிய யாகத்தில் அம்மனுக்கு சிறப்பு பல்வேறு அபிசேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா சிறப்பு யாகம் சிறப்பு பூஜை நடைபெறும்.

No comments

Copying is disabled on this page!