Breaking News

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி துவக்கி வைத்தார்.

 

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை ஆட்சியர் பார்வையிட்ட காட்சி 

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோவில் வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் பேசிய போது.


 இன்றைய தினம், மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோவில் வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 


இக்கண்காட்சி 04.10.2024 முதல் 10.10.2024 வரை காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெறும். இவ்விற்பனை கண்காட்சியில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களான திணை மாவு, சத்துமாவு உள்ளிட்ட உணவு பொருட்களும், கொலு பொம்மைகளும், ஊதுவத்தி, பஞ்சகாவிய விளக்கு உள்ளிட்ட பொருட்களும், பாய், ஆடை அலங்கார வகைகள் உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக இதுபோன்ற விற்பனை கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசானது, மகளிர் சுய உதவிக்குழுவின் தரத்தினை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரம் பெருக தொடர்ந்து, பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


 மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தேவையான வங்கி நேரடி கடன், சமுதாய முதலீட்டு நிதி கடன், சுழல் நிதி, அதேபோல், வட்டார வணிக மையம் உருவாக்கப்பட்டு அவர்களின் தொழில் வளர்ச்சி நிதி வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கல்லூரி சந்தை கண்காட்சி மற்றும் விற்பனைகள் மதி அனுபவ அங்காடி வணிக வளாகங்கள், சிறு விற்பனை நிலையங்கள் மற்றும் மதி நடமாடும் வாகனங்கள் ஆகியவைகள் செயல்படுகிறது. தற்போது நடைபெறும் விற்பனை கண்காட்சி சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

  

இந்நிகழ்வின்போது, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் குணசேகரன் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!