Breaking News

தென் தமிழக கடலோர கிராமங்களில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது. தாது மணல் கதிர்வீச்சு கூடங்குளம் அணு உலை உள்ளிட்டவை புற்றுநோய் வருவதற்கான அச்சுறுத்தலாக உள்ளது.


கூடங்குளம் அணு கழிவுகளை அங்கேயே வைத்து பொதுமக்களை அச்சுறுத்தாமல் ராஜஸ்தான் போன்ற பாலைவனங்கள் நிறைந்த பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும், கவர்னரை திருப்திப்படுத்துவதற்காக தூர்தர்ஷன் இயக்குனர் தமிழ்த்தாய் வாழ்த்தில் இரண்டு வரிகளை தவிர்த்து படித்திருக்கலாம் என நெல்லையில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை துறை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி  கொண்டாடப்பட்டது.   கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்ற இதில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்கினார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும்  புற்றுநோய் மையத்தில் ஆண்டுக்கு ₹ 5 கோடி மதிப்பில் புற்றுநோய்க்கான மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. நெல்லையில் 1200க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பெற்று மீண்டு  உள்ளனர். தென் மாவட்டங்களில் அதிக அளவு கடற்கரை கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களில் காணப்படும் தாது மணல் கதிர் வீச்சும் கூடன்குளம் அணு உலையும் புற்றுநோய் பாதிப்புக்கான காரணமாக உள்ளது. 

இரண்டு அனு உலைகள் செயல்படுத்து வரும் நிலையில்  கூடங்குளம் அணு உலை அணுக்கழிவுகளை அங்கேயே சேகரித்து வைத்துள்ளதால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த அணுக்கழிவுகளை ராஜஸ்தான் போன்ற பாலைவனங்கள் நிறைந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம். ஆளுநர் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிப்பதற்கு முழு உரிமை உள்ளது. மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி மாநிலத் தலைவர் சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் எந்த குறையும் இல்லை ஆனால் அவர் சிண்டிகேட் உறுப்பினராக பதவியேற்ற பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி மாணவர்களுடன் செல்பி எடுத்து விளம்பரப்படுத்தியது தவறு பொது நலனில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். 

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு முதலமைச்சருக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட பல்கலைக்கழகம் தொடர்பாக சட்டமன்றத்தில்  பத்துக்கும் மேற்பட்ட மசோதாக்கள்  நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இது போன்ற பல மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாக்கள் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்பது சட்டமன்ற விதி ஆனால் ஆளுநர் சட்டமன்ற மரபுப் படியும் சட்ட விதிப்படியும் நடப்பதில்லை. அவர் ஆர்எஸ்எஸ் விதிப்படி நடக்கிறார். 

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானத்திற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பது கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தூர்தர்ஷன் இயக்குனர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஆளுநரை திருப்திப்படுத்துவதற்காக தூர்தர்ஷன் இயக்குனர் தமிழ்த்தாய் வாழ்த்தில் இரண்டு வரிகளை தவிர்த்து விட்டு படித்திருக்கலாம். என்றார், மேலும் யாரையோ திருப்தி படுத்துவதற்காக என்னை குறிப்பிட்டு தவறான தகவலை பகிர்ந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இயக்குனர் எனக்கு மன்னிப்பு கடிதம் அளித்தார் என்றும் சபாநாயகர்  தெரிவித்தார். 

No comments

Copying is disabled on this page!