திருநெல்வேலி, பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பருவநிலை மாற்றம் தாக்கம் குறித்த விழிப்புணர்வு.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பருவநிலை மாற்றம் தாக்கம் குறித்த விழிப்புணர்வு நாளை முன்னிட்டு பள்ளியின் பசுமை படை சார்பாக பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி எவாஞ்சலின் அவர்கள் தலைமை தாங்கினார், திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி சாய் சுப்புலட்சுமி அவர்கள் மரக்கன்றுகளை நட்டார், இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் முன்னாள் ஆசிரியர்கள் திரு காந்திராஜன் திரு ராஜா முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி ஆய்வக உதவியாளர் திரு அனந்த பத்மநாபன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திரு வீரபாண்டி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்
No comments