தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட தலைவரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கீழ் தூத்துக்குடி வ.உ.சி. சாலையில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் 30 சதவீத தள்ளுபடியுடன் தீபாவளி சிறப்பு விற்பனையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், கனிமொழி எம்.பி. விற்பனையை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன். மண்டலத் தலைவர்கள் நிர்மல்ராஜ், பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி மன்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments