குலசேகரன்பட்டினத்தில் குறவர் குறத்தியர் உணவுக்காக வைத்த கோரிக்கை. உடனடியாக பண உதவி வழங்கிய தூத்துக்குடி எம்.பி. கனிமொழி.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா இன்று நடந்தது.
இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அரசு ஆரம்ப சுகாதார கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது கனிமொழியை காண்பதற்காக குலசேகரன்பட்டினத்தில் ஊசி பாசி விற்கும் ஆண்கள் பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெளியே வந்த கனிமொழி ஊசி பாசி விற்பவர்கள் சந்தித்து பேசினார்.
அப்போது தசரா திருவிழாவிற்காக அனைவரும் இங்கு வந்துள்ளதாக கூறிய அவர்கள் இன்றைய உணவுக்காக எங்களுக்கு ஏதாவது பொருளுதவி வழங்க வேண்டும் என்று கனிமொழியை பார்த்து கோரிக்கை வைத்தனர். உடனடியாக அருகே நின்ற தனது உதவியாளரை அழைத்து அவரிடமிருந்து பணம் பெற்று அதை ஊசி பாசி விற்ற பெண்களிடம் வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல் : 7339011001
No comments