புதுச்சேரியில் இணையவழியில் இளைஞா்களை குறிவைத்து மோசடிக் கும்பல் செயல்படுவதால், அவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இணையதள குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு கண்காணிப்பாளா் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
புதுச்சேரியைச் சோ்ந்த இளைஞா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக உள்ளாா். அவா் கைப்பேசி செயலி மூலம் மசாஜ் மையத்தை தேடியுள்ளாா்.பின்னா், அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டுள்ளாா். அதன்படி, அவா் மா்மநபா் கூறிய வங்கிக்கணக்கு எண்ணில் ரூ.30 ஆயிரம் செலுத்தி ஏமாந்துள்ளாா்.
இணையவழியில் மசாஜ் மையங்கள் போன்ற தகவல்கள் மோசடியாளா்களால் கையாளப்படுகின்றன. ஆகவே, பணத்தை செலுத்தி இளைஞா்கள் ஏமாற வேண்டாம்.அத்துடன், மோசடிக் கும்பலால் பாதிக்கப்படுவோா் பயப்படாமல் புகாரளிக்க வேண்டும். மஜாஜ் மையம் என்ற பெயரில் புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் ரூ.7 லட்சம் மோசடி நடந்துள்ளது. மோசடியாளா்களைப் பிடிக்க விசாரணை நடந்து வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments