உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட குபேர் வார்டில், ரூ.35 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொகுதி எம்எல்ஏ நேரு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட குபேர் நகர் வார்டு பகுதியான அந்தோணியார் கோவில் வீதி மற்றும் ராஜீவ் காந்தி அரசு குடியிருப்பு பகுதியை சுற்றி உள்ள பழைய சாலைகளை மாற்றி புதிய சிமெண்ட் சாலை மற்றும் இருபுற காங்கிரட் வாய்க்கால் அமைக்கும் பணிகள் புதுச்சேரி நகராட்சி மூலம் 2022 -2023 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 35 லட்சம் செலவில் பணிகள் துவங்குவதற்கான
பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை மைய நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments