Breaking News

காவலர்கள் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்.


கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசால்  10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில்  ஆண்டுதோறும் முதல் பத்து இடங்கள் பெற்று தேர்ச்சி அடைந்த காவலர்களின்  குழந்தைகளுக்கு பண பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் கரூர் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த தலா 10 காவலர்களின் குழந்தைகளுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் பணவெகுமதி வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள். 

No comments

Copying is disabled on this page!