Breaking News

காரைக்குடியில் இருந்து விக்கிரவாண்டி வரை சாலை வழியாக சைக்கிளில் சென்று தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை மாவட்ட நிர்வாகி ஆரோக்கியதாஸ்.

 


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி அன்று விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆரோக்கியதாஸ் என்பவர் காரைக்குடியில் இருந்து மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலை வரை சைக்கிளில் சென்று சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகின்றார் காரைக்குடியில் தொடங்கிய இவரது சைக்கிள் பயணம் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வந்தடைந்த நிலையில் பேருந்து நிலையம் பகுதி சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாநாட்டில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகின்றார்.

No comments

Copying is disabled on this page!