கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் பிரசாத் தலைமையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆய்வுப் பணிகளை ஆய்வு செய்து வளர்ச்சி திட்டத்திற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்டன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக துணை முதல்வரான பின் முதல் முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான மணலூர் பேட்டை பேரூராட்சியில் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ தலைமையில் திமுக நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
No comments