செந்தில் பாலாஜி மீது பயத்தினால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு.
கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார், அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருந்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது தற்போதைய திமுக ஆட்சியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட கொண்டு வரவில்லை பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்து விட்டது ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்றார்கள் அதை நிறைவேற்றவில்லை ஒரு செங்கலை தூக்கி கொண்டு அலைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு - செங்கல் நிதி என்று மக்கள் அழைக்கின்றனர்.
திமுக கூட்டணியில் இருக்கும் 39 எம்.பிக்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை செந்தில் பாலாஜி மீது பயத்தினால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தினால் அமைச்சர் வழங்கி உள்ளனர் செந்தில் பாலாஜி கெட்டிக்காரர் தான்அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் தான் திமுக உள்ளது என்றார்.
No comments