தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படை வீரர்கள் வீரமங்கியார் அமைப்பின் முதல் பொதுக்கூட்டம் கோவில்பட்டியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவரான கேசவ ராஜன், செயலாளர் தர்மபுரி மாவட்டம் திரு கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார், பொருளாளராக தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார், செயற்குழு உறுப்பினராக தர்மபுரி மாவட்டம் நடராஜன் அவர்கள் தேனி மாவட்டம் வெங்கடேசன் அவர்கள் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா முனியசாமி அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், முடிவில் சுபேதார் மேஜர் பொன்னுச்சாமி அவர்கள் நன்றிகளை ஆற்றினார்கள்.
இதில் முன்னாள் ராணுவ வீரர்களுடைய மனைவியும் முன்னாள் ராணுவ வீரர்களும் ஏராளமான பெயர்கள் கலந்து கொண்டனர் இதில் முக்கியமாக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில்,
1. முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் எல்லா தலைமை மருத்துவமனை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு உயர்தர சிகிச்சை சிறப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் வைக்கப்பட்டது.
2. கோவில்பட்டி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கேந்திர வித்யாலயா பள்ளிகள் நிறுவ வேண்டும் முன்னாள் ராணுவத்தினர் உடைய பிள்ளைகளுக்கு இலவசமாக பள்ளியில் படிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானமாக வைக்கப்பட்டது
3. மூன்றாவதாக முன்னாள் ராணுவ வீரர்கள் மரணமடைந்த அவர்களுடைய மனைவிக்கு வேலை வாய்ப்பு அவருடைய குழந்தைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கையாக வைத்து இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments