ஈரோட்டில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பது குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் பட்டாசு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கி காளைமாட்டுசிலை, ரயில் நிலையம், டீசல்செட், சென்னிமலை சாலையில் சென்ற பேரணி மீண்டும் தீயணைப்பு நிலையத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியில், 50.க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பதாதைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.
தீயணைப்பு வாகனங்களும் இந்த பேரணியில் பங்கேற்றன. தீபாவளி என்றாலே நினைவுக்கு வரும் பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா என்ற பாடலுடன், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்த கருத்துக்களையும் பேரணியில் ஒலிபரப்பினர்.
No comments