திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ஜீவா சுவாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் இன்று நடிகர் ஜீவா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் பேட்டரி காரில் ஏறி கோவில் முன்பு வந்து இறங்கினார். அதைத் தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார்.
கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் ஜீவாவுடன் பக்தர்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் கைகொடுத்தும் மகிழ்ந்தனர். கோவிலில் தரிசனம் செய்ய வருகை தந்த நடிகர் ஜீவா செய்தியாளர்களிடம் பேசுகையில், படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று திருச்செந்தூருக்கு வருகை தருவேன். இதற்கு முன்பு ராம், கோ படங்கள் வெற்றியடைய வேண்டிய வருகை தந்தேன். தற்போது பிளாக் திரைப்படம் வெற்றி பெற வேண்டி வருகை தந்துள்ளேன் என்று கூறினார்.
தொடர்ந்து என்ன படங்களில் நடித்து வருகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அதை இணையதளம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றார். நடிகர் விஜய் கட்சியில் சேர்வீர்களா? என்ற கேள்விக்கு நான் முருகனை தான் தரிசனம் செய்ய வருகை தந்துள்ளேன் என்று கிண்டலாக கூறி கிளம்பினார்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001
No comments