கல்லூரி பேராசிரியர்கள், நிறுவனத்தலைவர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான எடுடெக் பவர் இண்டியா விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் எம்.ஐ.டி. ஸ்கொயர் நிறுவனம், இந்தியா முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிறுவனத்தின் தலைவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வியை மேம்படுத்துவதில் சிறந்த தலைவர்கள் மற்றும் சிறந்த பேராசிரியர்கள் ஆகியோருக்கு உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 'எடுடெக் பவர் இண்டியா' விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
இதற்கான விழா சென்னை எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. எம்.ஐ.டி ஸ்கொயர் மற்றும் ராஜ் ஸ்கொயர் புவனேஸ்வர், எம்.ஐ.டி ஸ்கொயர் தமிழ்நாடு துணைத் தலைவர் சேரன் கோபிநாதன், ஒருங்கிணைப்பாளர் ஹேமா ஆகியோர் 2024 ஆம் ஆண்டுக்கான எடுடெக் பவர் இண்டியா விருது வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த விருது வழங்கம் விழாவில், எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள், பனிமலர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள், வேல்ஸ் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரி பேராசியர்கள் மற்றும் பொறியியல் கல்லூரி தலைவர்கள் பங்கேற்றனர். இதில், 10க்கும் மேற்பட்ட கல்லூரி தலைவர்கள், 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் எடுடெக் பவர் இண்டியா 2024-க்கான விருது அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரி மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
No comments