Breaking News

குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ் தலைமையில் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர்( பொறுப்பு) இருதயராஜ் தலைமையில் போதைப் பொருட்கள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் கஸ்பா கௌதம் பேட்டை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் தரணி பர்வதம் ஆகியோர் குற்ற நடவடிக்கைகள் விபத்துக்கள் குறித்தும் சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் மேலும் குடும்பத்தினர் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) இருதயராஜ் கூறுகையில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் செல்போனில் வரும் லிங்குகள் மற்றும் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் குறித்த அழைப்புகளில் உங்களுடைய  OTP என்னை தெரிவிக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.

கல்வி கற்க முடியாத மாணவிகளுக்கு பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியில் சேர காவல்துறை சார்பில் அனைத்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் கூறினார், இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் தலைக்கவசம் அணிவது அவசியம் என்றும் சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் அன்பழகன் பத்மநாபன் வீராசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.

No comments

Copying is disabled on this page!