வடசென்னை அனல் மின் நிலையத்தில் சாம்பல் கழிவு ஏற்ற சென்று சாம்பல் கால்வாயில் தவறி விழுந்து மாயமான லாரி ஓட்டுநரை கண்டுபிடித்து தர வலியுறுத்தி உறவினர்கள் அனல் மின் நிலைய வாயிலில் தர்ணா போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (35) என்ற லாரி ஓட்டுநர் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி சாம்பல் கழிவை ஏற்றி செல்வதற்காக லாரியில் வந்தார். அனல் மின் நிலையத்தில் சுடு சாம்பல் செல்லும் கால்வாயில் நாகராஜ் தவறி விழுந்து மாயமானார்.இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்வாயில் தவறி விழுந்து 8வது நாளாகியும் கிடைக்காததால் உறவினர்கள் அனல் மின் நிலைய வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனல் மின் நிலையத்திற்குள் சாம்பல் ஏற்ற செல்லும் லாரிகள் செல்ல முடியாமல் வெளியே நிற்கின்றன. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அனல் மின் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
No comments