Breaking News

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள நினைவு தூணுக்கு முதலமைச்சர் ரங்கசாமி,உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

 


நாடு முழுவதும் பாதுகாப்பு பணியின் போது வீரத்தீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி, கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்று, காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்‌ தூவி காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.மேலும்,பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், தலைமைச் செயலர் சரத் சவுகான்,காவல்துறை இயக்குநர் ஷாலினி சிங், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அஜித்குமார் சிங்லா,துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரிஜேந்திர குமார் யாதவ் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட காவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!