Breaking News

புதுச்சேரி மையக் கூட்டுறவு விற்பனை விநியோக சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் நிலையத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

 


புதுச்சேரி மைய கூட்டுறவு விற்பனை விநியோக சங்கத்தின் சார்பில் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.


புதுச்சேரி கூட்டுறவுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை நடைபெற்ற விழாவில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா,மேலான் இயக்குனர், இளங்கோவன்,துணைப்பதிவாளர் சாரங்கபாணி ஆகியோர் முன்னிலை வகித்தார்.


விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பெட்ரோல் நிலையத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். 


இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி மைய கூட்டுறவு விற்பனை விநியோக சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!