Breaking News

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பரங்கிபேட்டை சர்வேயர் நிர்மலா கைது*

 


பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பரங்கிபேட்டை சர்வேயர் நிர்மலா கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சின்ன காரைக்காடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பரங்கிபேட்டையில் நிலம் வாங்கி உள்ளார். இந்த நிலத்தை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்ய பரங்கிபேட்டை சர்வேயர் நிர்மலா லஞ்சம் கேட்டுள்ளார். இன்று ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றபோது, கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான போலீசார் சர்வேயரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!