அத்திப்பட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி. லஞ்சத்தை ஒழிப்பது குறித்து பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமையில் நடைபெற்றது. வல்லூர் அனல் மின் நிலையம் சார்பில் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அத்திப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனல் மின் நிலைய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரசு அலுவலகங்களில் சான்றுகளை பெறுவதற்கோ அல்லது சேவைகளை பெறுவதற்கோ லஞ்சம் கேட்டால் எங்கு, யாரிடம், எப்படி புகார் அளிப்பது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் புகார் அளிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும், லஞ்சம் கேட்பவர்கள் மீதுஎடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அப்போது எடுத்துரைத்தனர். தொடர்ந்து ஊழல், லஞ்சத்தை ஒழிப்பது குறித்து பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் வார்டு உறுப்பினர்கள் கோமதிநாயகம், பரிமளா கஜேந்திரன், துளசி பாய் சுந்தரம், மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
No comments