சின்னமனூர் இந்து இளைஞர் முன்னணி சார்பாக ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்தநாள் விழா.
தேனி தெற்கு மாவட்டம் சின்னமனூர் நகரில் இந்து இளைஞர் முன்னணி (HYF) சார்பாக மலை ஆர்மி கோச்சிங் சென்டர் வளாகத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்த தினமான இன்று தேசிய அர்ப்பணிப்பு தினமாக கொண்டபடுவதால் மலை ஆர்மி கோச்சிங் சென்டர் நிறுவனர் கொடியரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது சிந்தனைகள் பற்றி HYF மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்.செல்வா எடுத்துரைத்தார். உடன் இந்துமுன்னணி மாவட்ட தலைவர் V.சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் R.பாலமுருகன், உத்தமபாளையம் நகர பொதுச்செயலாளர் பெரியசாமி கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments