கீழ்பவானி பிரதான கால்வாயில் முறை வைத்து தண்ணீர் திறப்பது தொடர்பாக இரு தரப்பு விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பேரில் ஈரோடு கோண வாய்க்கால் பகுதியில் உள்ள நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் கீழ்பவானி வடிநிலக்கோட்டை செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் இரண்டு தரப்பு விவசாயிகள் பங்கேற்று எதிர்தர் கருத்துக்களை கூறியதால் பரபரப்பும் ஏற்பட்டது இரண்டு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக கான்கிரீட் திட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே இந்த வாக்குவாதம் ஏற்பட்டது இருதரப்பினருமே முறை வைத்து தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒரு தரப்பினர் நடவு பணிகள் முடிவடையும் வரை முறை வைக்கக் கூடாது என வலியுறுத்தினர்.
மற்ற பிரச்சனைகளை முன்வைத்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்துப் பேச அதிகாரிகள் திட்டமிட்டு இந்த கூட்டத்தை நடத்தி இருந்தனர் ஒரு தரப்பினர் பேசி முடித்துச் சென்ற பின் மற்றொரு தரப்பினர் உள்ளே சென்றபோது இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் முடிவு ஏதும் எட்டப்படாமல் கூட்டத்தை செயற்பொறியாளர் முடித்து வைத்தார்.
No comments