வில்லியனுார் அருகே, வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
புதுச்சேரி, வில்லியனுார் அருகே உள்ள கரையான்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன்- லலிதா தம்பதியரின் மகன் இளவரசன்,24; எம்.காம்., பட்டதாரி. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, கணுவா பேட்டையை சேர்ந்த தாடி அய்யனார், மணிகண்டன், அஜித்குமார், அருண் மற்றும் அருள் பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில் புதுச்சேரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகர், வழக்கில் தொடர்புடைய தாடி அய்யனார் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ 9,500 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார்.
No comments